தளபதி-65 படத்தில் இணைந்த ‘கோலமாவு கோகிலா’ பிரபலம்.! இது நெல்சனுடன் 3-வது முறையாமே.?
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களில் எடிட்டராக பணியாற்றிய நிர்மல் குமார் தளபதி 65 படத்திலும் எடிட்டராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகி பாபு மற்றும்VTV கணேஷ் ஆகியோரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ரஷ்மிகா மந்தானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
விரைவில் படப்பிடிப்பை தொடங்கவிருக்கும் தளபதி-65 படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது தளபதி-65 படத்தின் எடிட்டராக நிர்மல் குமார் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் தற்போது நெல்சன் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் எடிட்டராக பணியாற்றி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது