10 ஆண்டுகள் ஆண்ட அதிமுக ஆட்சியில் முதல் 5 ஆண்டுக்கு -100 – மார்க் போட்ட ப.சிதம்பரம்

Default Image

பத்து ஆண்டுகள் அதிமுக கட்சி ஆண்டிருக்கிறது, முதல் 5 ஆண்டுக்கு -100 மதிப்பெண் போட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். 

இதுகுறித்து காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திடம், தமிழக அரசியலில் இப்ப இருக்கின்ற ஆளும் கட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் வழங்குவீங்க என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கடந்த 10 ஆண்டுகள் அதிமுக கட்சி தமிழகத்தை ஆண்டிருக்கிறது, அதில் முதல் 5 ஆண்டுகளுக்கு -100 மதிப்பெண் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அந்த முதல் 5 ஆண்டுகளில் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு மார்க் போட முடியாது என்று மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். அந்த -100 மதிப்பெண்ணை எடுத்து இவர்களுக்கு போடுங்கள் என்றும் நான்கு வருடம் 9 மாதம் முதல்வர் பழனிசாமி எங்கே இருந்தார் என்றே தெரியாது எனவும் கூறியுள்ளார். 3 மாதத்தில் சுறுசுறுப்பாக வந்து ஊர் ஊராக சென்று, இந்த திட்டத்தை அறிவிக்கிறேன், அந்த திட்டத்தை அறிவிக்கிறேன் என்றால், மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு ரூபாய் கூட ஒதுக்க வேண்டும் என்று அவர்களுக்கு அவசியமில்லை, ஒதுக்கவும் மாட்டார்கள் என குற்றசாட்டியுள்ளார். ஏனென்றால், வரைவு திட்டமே கிடையாது. வரைவு திட்டம் தயாரித்து, அதனை ஆய்வு செய்து, அமைச்சரவை ஏற்றுக்கொண்ட பிறகு நிதியமைச்சர் தான் நிதி ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  தேர்தலுக்கு 15 நாட்கள் முன்பு அறிவிப்பு என்பது மல்லிகை, கனகாபரம் பூ மத்தாப்பு மாதிரித்தான் அந்த அறிவிப்பும் என தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னாள் வரும் அறிவிப்புகள் அனைத்தும் மத்தாப்புதான் என்றும் இந்த அரசாங்கம் வெற்றி பெற்றால் செயல்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் வெற்றியை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 1 ரூபாய் ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளதா?என்று கேள்வி எழுப்பி, தமிழகத்தில் பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்