உரிய நேரத்தில் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Default Image

உரிய நேரத்தில்  ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அவர் பேசுகையில், ஜம்மு-காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை  நீக்கி , யூனியன் பிரதேசமாக மாற்றியது தற்காலிகமானது.370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து யூனியன் பிரதேசத்தில் பரவலாக்கம் மற்றும் அதிகாரப் பகிர்வு நிகழ்ந்துள்ளது. பஞ்சாயத்து தேர்தல்களில் 51 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.

இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஜம்மு-காஷ்மீரை ஆட்சி செய்வார்கள்.நியாயமான மற்றும் அமைதியான முறையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்புகளில் எந்தவொரு தவறும் இல்லை .இப்பகுதியில் இரண்டு எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு 2022 -ஆம் ஆண்டுக்குள் ரயில்வேயுடன் இணைக்கப்படும். ஜம்மு-காஷ்மீர்  மக்கள் “யாரும் தங்கள் நிலத்தை இழக்க மாட்டார்கள்” என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
seizure (1)
puducherry school rain holiday
Minister Geethajeevan
Yogi Babu
Southwest Bay of Bengal
M K Stalin