மறைந்த சித்ராவின் ‘கால்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மறைந்த சித்ராவின் முதல் திரைப்படமான கால்ஸ் படத்தினை பிப்ரவரி 26-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி தனது விடா முயற்சியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜே சித்ரா .சமீபத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டது இன்றும் அவரது ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது .இந்த நிலையில் மறைந்த சித்ரா நடித்த முதல் திரைப்படம் “கால்ஸ்”.
இந்த படத்தில் சித்ரா கால் சென்டரில் வேலை செய்யும் கனவுகள் நிறைந்த தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.திரைப்பட கல்லூரியில் பயின்று வரும் மாணவரான ஜே.சபரீஷ் என்பவர் இந்த படத்தினை இயக்குகிறார்.மேலும் காவிரி செல்வி மற்றும் ஜெயக்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆர்.சுந்தராஜன் ,வினோதினி , ஸ்ரீரஞ்சனி மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது .இந்த நிலையில் தற்போது மறைந்த சித்ரா நடித்த முதல் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .ஆம் சித்ராவின் முதலும் , கடைசியுமாக நடித்த கால்ஸ் திரைப்படத்தினை வரும் பிப்ரவரி 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Late Actress #VJChitra‘s Upcoming Movie #Calls Helmed By Director @sabarish14ip Releasing On 26th Feb!! #CallsFromFeb26 pic.twitter.com/DTkn8mahos
— RockFort Entertainment (@Rockfortent) February 13, 2021