தேமுதிகவினர் 300 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு – காரணம் என்ன?
தேமுதிகவின் 21வது கொடிநாள் கொண்டாட்டத்தின் போது ஊர்வலமாக சென்ற தேமுதிகவினர் 300 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் நேற்று தேமுதிகவின் கொடிநாளை முன்னிட்டு சாலிகிராமத்தில் இருந்து தேமுதிக தொண்டர்கள் காரில் அணிவகுத்தவாறு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது 75 வாகனங்களில் விதிகளை மீறி ஊர்வலமாக சென்றதால் தேமுதிக பகுதி செயலாளர் லக்ஷ்மணன் உட்பட 300 பேர் மீது விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
சட்டவிரோதமாக கூடுதல் நோய் பரப்பக்கூடிய வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.