ஹங்கேரியில் காகித பாட்டில்களில் குளிர்பானம்…! கோக்க கோலா நிறுவனம் அதிரடி..!
குளிர்கால தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை பயன்படுத்தும் முயற்சியில் கோக்கோ கோலா நிறுவனம் இறங்கியுள்ளது.
இன்று குளிர்பானங்களை என்றாலே பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களில் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உலக அளவில் நெகிழி பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குளிர்கால தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை பயன்படுத்தும் முயற்சியில் கோக்கோ கோலா நிறுவனம் இறங்கியுள்ளது. வாயு நிறைந்த பானங்களை காகிதங்களை பயன்படுத்தி தயாரிக்கும் குடுவையில் அடைப்பது, மிகவும் சவால் நிறைந்த ஒன்று என்பதால், இது குறித்து ஆய்வுகள் தோல்வியிலேயே முடிந்தன.
இதனையடுத்து டென்மார்க்கை சேர்ந்த பபோகோ என்ற நிறுவனம் ஏழு வருட ஆய்வக பரிசோதனைகளுக்குப் பின் குளிர்பானங்களை பேப்பர் பாட்டிலில் தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளது. அடிப்படை சோதனைகள் திருப்தி அடைந்த நிலையில், முதற்கட்டமாக அடேஸ் என்ற தனது பழரச குளிர்பானத்தை காகித பாட்டில்களில் அடைத்து ஹங்கேரியில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
மேலும், கோலா நிறுவனம் சோதனை முதற்கட்டமாக 2,000 காகித பாட்டில்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதில் வெற்றி கிடைத்தால், கோக்க கோலா நிறுவனம் குளிர்பான தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை மட்டுமே உலகம் முழுவதிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.