ஒருபுறம் ரகானே அரை சதம் ,மறுபுறம் ரோகித் 150 !

Default Image

2-வது டெஸ்ட் போட்டியில் ரகானே அரை சதம் அடித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை.கில்,கேப்டன் கோலி டக் -அவுட், புஜாரா 21 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.3 விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது.

தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரோகித் மற்றும் ரகானே ஆகிய இருவரும் ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது.தற்போது ரகானே அரைசதம் அடித்துள்ளார்.மேலும் ரோகித் 150 ரன்கள் அடித்துள்ளார்.68 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து,230 ரன்கள் அடித்துள்ளது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லீச் ,அலி ,ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.ரோகித் சர்மா 150 ரன்களுடனும் ,ரகானே 59 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025