வயது வந்த நபர்கள் திருமணம் செய்ய குடும்பம், சமூகம் அல்லது குலத்தின் ஒப்புதல் தேவையில்லை – உச்சநீதிமன்றம்

Default Image

இரண்டு வயது வந்த நபர்கள் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டபின், அவர்கள் சம்மதத்திற்கு முதன்மையாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், குடும்பம், சமூகம் அல்லது குலத்தின் ஒப்புதல் தேவையில்லை.

கலப்பு திருமணம் செய்துகொண்ட கர்நாடகாவை சேர்ந்த தம்பதியினர், உச்சநீதிமன்றத்தில் தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என கோரியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹிருஷிகஷ் ராய் ஆகியோர் விசாரித்தனர்.

இந்த விசாரணையில் சமுதாய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்துகொள்ளும் இளைஞர்களுக்கு நீதிமன்றம் உதவி செய்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்கள், இந்தியாவில் சாதி மற்றும் சமூக குற்றங்களை குறைக்க முன்னோக்கி செல்லும் வழியை காட்டுகிறார்கள் என்றும்,  இதுபோன்ற திருமணங்கள் தான் சாதி மற்றும் சமூக மாற்றங்களை குறைக்கவும், முன்னோக்கி செலவும் இருக்கும் வழி என்று தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து நீதிபதி கவுல் அவர்கள் கூறுகையில், சாதியை நிர்மூலமாக்க உண்மையான தீர்வு திருமணம் ஆகும் என்று நம்புகிறேன். இரத்தத்தின் இணைவு  மட்டுமே உறவினர் மற்றும் உறவினர் என்ற உணர்வை உருவாக்க முடியும் என்றும், சாதி மற்றும் சமூகத்தின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்யும் இளைய தலைமுறை பெரியவர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.இந்த இளைஞர்களின் உதவிக்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து இரண்டு நீதிபதிகளும் கருத்துக் கூறுகையில், இரண்டு வயது வந்த நபர்கள் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டபின், அவர்கள் சம்மதத்திற்கு முதன்மையாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், குடும்பம், சமூகம் அல்லது குலத்தின் ஒப்புதல் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் இது குறித்து கூறுகையில், இந்த வழக்கு சார்பாக , அடுத்த எட்டு வாரங்களில் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும், இதுபோன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்று சில வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்