தனது கிராமத்தை மேம்படுத்த பல லட்சம் ரூபாய் சம்பளத்தை உதறி தள்ளிய பெண்!

Default Image

தனது சொந்த கிராமத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவில் பல லட்சம்  ரூபாய் சம்பளத்தில் பார்த்து வந்த இன்ஜினியர் வேலையை உதறி தள்ளிவிட்டு, பஞ்சாயத்து தலைவர் போட்டியில் நின்று ஜெயித்துக்காட்டிய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே என்னும் மாவட்டத்தில் உள்ள ஜகலூர் எனும் தாலுகாவை சேர்ந்த சோக்கி எனும் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்மணி சுவாதி என்பவர் பி.இ தொழில்நுட்பம் பயின்று அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். ஐந்து ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றி விட்டு தற்பொழுது அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சுவாதி நாடு திரும்பியுள்ளார். இதற்கு காரணம் தான் தனது சொந்த கிராமத்தை சீர்ப்படுத்த வேண்டும் என்பது தானாம்.

பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்த சுவாதி அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு தனது கிராம மக்களுக்கு சேவையாற்றுவதற்காக கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் பஞ்சாயத்து தலைவராக தற்பொழுது தேர்வாகி இருக்கும் நிலையில் சொந்த கிராமத்தில் வளர்ச்சிக்காக லட்ச ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டு வந்த சுவாதியின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்