எத்தனை பேரை கைது செய்வீர்கள்..? -முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி..!

Default Image

நேற்று தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய இடத்தில் பொக்லைன் இயந்திரம்கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். அப்போது, நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் வாக்குவாதம் செய்தார்.

இதனால், காட்டுமன்னார்கோவில் போலீசார் இளங்கீரனை கைது செய்தனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரனை அடித்து – இழுத்துச் சென்று அராஜகமாகக் கைது செய்துள்ள அ.தி.மு.க. ஆட்சிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“விவசாயி” என்று வேடம் போட்டு, நகர்வலம் வந்து கொண்டே – தனக்குக் கீழ் உள்ள காவல்துறையை விட்டு விவசாய சங்கத் தலைவரை அராஜகமாகக் கைது செய்திருக்கும்  பழனிசாமி – மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துள்ளார். “மனிதாபிமானம் கிலோ என்ன விலை” என்று விவசாயிகளிடம் கேட்கும்  பழனிசாமி, ‘என்னை வந்து பார்த்து விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நன்றி தெரிவித்தார்’ என்பதை உள்நோக்கமாக வைத்து – இளங்கீரன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் போட்டு மனித நேயமற்ற முறையில் கைது செய்திருப்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை! விவசாயிக்கு ஒரு கையில் “கடன் தள்ளுபடி அறிவிப்பு” இன்னொரு கையில் கடுமையாகத் தாக்கி “கைவிலங்கு” போடுவது – என்ற முதலமைச்சர்  பழனிசாமியின் வேடம் இதோ கலைந்து விட்டது!

அதிகார வெறி தலைக்கேறுவதால் படுதோல்வி அடையப் போவது முதலமைச்சர் திரு. பழனிசாமிதானே தவிர; போராடும் விவசாயிகள் அல்ல என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்