பட்டாசு ஆலை விபத்து – 6 பேர் மீது வழக்குப்பதிவு
விருதுநகர் அருகே ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்ப்பட்ட அறைகள் உள்ளன.அதில்,நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் தங்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது, மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த வெடி விபத்தில் இது வரை 19 பேர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டாசு கடை உரிமையாளர்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.