அடடே ஹீரோயின் இவரா ? மீண்டும் இணையும் பியார் பிரேமா காதல் கூட்டணி.!
இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஸ்டார் படத்தில் ரைசா வில்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஹரிஷ் கல்யாணிற்கு கடந்த 2018-ம் ஆண்டு இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் திரைப்படம் தான் பிரபலமாக்கியது. பிக்பாஸ் பிரபலமான ரைசா வில்சன் ஜோடியாக நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்தது.
சமீபத்தில் பியார் பிரேமா காதல் பட கூட்டணியுடன் மீண்டும் ஹரிஷ் கல்யாண் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இளன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஸ்டார் படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.
அதற்கான 3 போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.அதில் ஹரிஷ் கல்யாண் “தளபதி” படத்தில் வரும் ரஜினி கெட்டப்பிலும், “சிகப்பு ரோஜாக்கள்” படத்தில் வரும் கமல்ஹாசன் கெட்டப்பிலும் , ஷாருக்கான் கெட்டப்பிலும் இருப்பது போன்ற போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணிற்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அதாவது இளன் -யுவன்- ஹரிஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக மீண்டும் ரைசா வில்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.