IPL 2018:கோபமே வராத டி வில்லியர்ஸ்க்கு கோபத்தை வரவைத்த பஞ்சாப் அணி…! டி வில்லியர்ஸ் டென்ஷன் டாக் …!
பெங்களூர் அணி டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் , பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் பெங்களூர்- பஞ்சாப் அணிகள் மோதியது .
டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 30 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆரோன் பின்ச் ரன் எதுவும் எடுக்காமலும் யுவராஜ் சிங் வெறும் 4 ரன்களிலும் வெளியேறினார். இதனால் அந்த அணி தடுமாறியது. பின்னர் கருண் நாயரும் (29 ரன்) கேப்டன் அஸ்வினும் (33 ரன், 21 பந்து) அணியை காப்பாற்ற போராடினர். அந்த அணி 19. 2 ஓவரில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது
பெங்களூரு தரப்பில் உமேஷ் யாதவ் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது பஞ்சாப். முதல் ஓவரை அகபஷர் படேல், இரண்டாவது பந்தில் பிரண்டன் மேக்குலமை தூக்கினார். அவர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் கோலியின் (21 ரன்) விக்கெட்டை, இளம் சுழல் முஜீப் (ஆப்கானிஸ்தான்) வீழ்த்தினார். முஜிப்புக்கு முதல் ஐபிஎல் விக்கெட் இது.பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. டிவில்லியர்ஸ் 57 மற்றும் குயின்டன் டி காக் 45 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உதவினர்.
இந்த வெற்றி குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், அவுட் ஆகாமல் அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சியளிக்கிறது. தொடக்கத்தில் பவுண்டரிகளை விளாசமல் விரக்தி அடைந்தேன். ஆனால், கடைசியில் சிக்சர், பவுண்டரிகளை அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் தரப்பில் வாஷிங்டன், சேஹல், உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசினார்கள். சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடுவது எப்போதும் ஸ்பெஷல்தான். கடந்த வருட தொடர் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இந்த வருடத் தொடர் அப்படியிருக்காது’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.