கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..!
கர்ணன் படத்தின் இசைப்பணிகள் நடக்கும் இசைக்கருவிகளின் புகைப்படத்தை வெளியீட்டு கர்ணன் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு டீசர் வெளியீட்டு தெரிவித்தனர்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்தை பார்த்து அருமையாக இருக்கிறது என்று ட்வீட் செய்திருந்தார். தற்போது அதனை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் இசைப்பணிகள் நடக்கும் இசைக்கருவிகளின் புகைப்படத்தை வெளியீட்டு கர்ணன் என்று குறிப்பிட்டிருந்தார். ஆம் கர்ணன் படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்த்தவதுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
#Karnan ???????? pic.twitter.com/ttwujsjl8a
— Santhosh Narayanan (@Music_Santhosh) February 12, 2021