1,900 கிலோ வரை எடை சுமக்கும் திறனை உடையஃப்ளாட்பேக் ரக டிரக் மாடல் இந்தியாவில் அறிமுகம்..!!
ஃப்ளாட்பேக் ரக டிரக் மாடலை இங்கிலாந்தை சேர்ந்த குளோபல் வெஹிக்கிள் டிரஸ்ட் அமைப்பு உருவாக்கி இருக்கிறது. இந்த டிரக்கை செயல்விளக்கம் செய்து காண்பிக்கும் நோக்கத்தில் இந்தியா கொண்டு வருகிறது ஷெல் ஆயில் நிறுவனம்.
சர் டார்கில் நார்மன் என்பவரது எண்ணத்தில் உருவான இந்த டிரக்கை மெக்லாரன் எஃப்-1 காரை வடிவமைத்த பிரபல கார் டிசைனர் கார்டன் முர்ரே வடிவமைத்துள்ளார். அனைத்து சாலை மற்றும் சீதோஷ்ண நிலையில் எளிதாக செல்லும் தகவமைப்புகளுடன் வளர்ந்து வரும் நாடுகளை மனதில் வைத்து இந்த டிரக்கை உருவாக்கி இருக்கின்றனர்.
2016ம் ஆண்டு இந்த டிரக்கின் புரோட்டோடைப் மாடல் உருவாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கிரவுண்ட் ஃப்ன்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டு, அதில் இந்த டிரக்கின் கியர்பாக்ஸ், எஞ்சின் குளிர்விப்பு அமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டது. அத்துடன், வீல் பேஸ் 200மிமீ வரை அதிகரிக்கப்பட்டது. இந்த காரின் காக்பிட் மிக எளிமையாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த காக்பிட்டில் கவனிக்க வேண்டிய விஷயம், வாகனத்தின் நடுவில் ஸ்டீயரிங் வீல் அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதுதான். முன்புறத்தில் 3 பேரும், பின்னால் இருக்கும் கேபின் பகுதியில் பக்கத்திற்கு தலா 5 பேர் வீதம் 10 பேரும் பயணிக்கலாம். பொருட்களை எளிதாக ஏற்றுவதற்கான அமைப்புடன் இந்த டிரக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான சரிவு மேடையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஃப்ளாட்பேக் டிரக் ஸ்டீல் லேடர் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருப்பதால், அதிக உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாகனத்தில் 1,900 கிலோ வரை எடை சுமக்கும் திறனையும் பெற்றுள்ளது. பொருட்களை ஏற்றுவதும் இறக்குவதும் எளிதான வகையில் இடவசதியும் இருக்கிறது. ஃபோர்டு டிரான்சிட் வாகனத்தில் பயன்படுத்தப்படும், 98 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும். அனைத்து சாலைகளுக்குமான வாகனமாக இருப்பதால் 4 வீல் டிரைவ் சிஸ்டம் அவசியம்.