#Cricket Breaking: 2 ஆம் டெஸ்டில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட இங்கிலாந்து.. முக்கிய வீரருக்கு இடமில்லை!
ind vs eng: 2 ஆம் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 தொடர்களை விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. மேலும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, நாளை சென்னை சேபாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தற்பொழுது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில், 2 ஆம் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் விலகினார். மேலும், அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு இடமில்லை.
இங்கிலாந்து அணி:
ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பேர்ன்ஸ், பென் போக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஜேக் லீச், ஒல்லி போப், டாம் சிப்லி பென் ஸ்டோக்ஸ். ஒல்லி ஸ்டோன்ஸ், கிறிஸ் வோக்ஸ், டான் லாரன்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.