சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்…!

நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால் கடந்த 7 ஆம் தேதி சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு நேற்று வீடு திரும்பினார். அவர் ஓய்வு எடுக்க சிறிது நாட்கள் ஆகும் என்பதால் படத்திற்கான படப்பிடிப்பை வருகின்ற மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025