இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் – துணை முதல்வர்
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய மாரியம்மாள் எனும் பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், விருதுநகர்-சாத்தூரில் இன்று நிகழ்ந்த தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு காயமுற்றோர் விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர்-சாத்தூரில் இன்று நிகழ்ந்த தனியார் பட்டாசுஆலை வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு காயமுற்றோர் விரைவில் பூரணநலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) February 12, 2021