பிறந்தநாள் பார்ட்டிக்கு வர மறுத்த நண்பனை கார் ஏற்றிக் கொன்ற கொடூரன்!
தன் வீட்டில் நடைபெறும் பிறந்தநாள் விழாவிற்கு வருவதற்கு மறுத்த தனது நண்பனை காரை ஏற்றி மூன்று முறை முன்னும் பின்னுமாக டயரால் நசுக்கி கொலை செய்த நண்பனின் செயல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வசித்து வரும் ரமேஷ் என்பவரின் நண்பர் தான் சின்னா. நேற்று இரவு ரமேஷ் மது அருந்தி கொண்டிருந்த பொழுது அவரது நண்பர் சின்னா ரமேஷை தொடர்பு கொண்டு தனது வீட்டில் நடைபெறும் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால் ரமேஷ் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்ததால் தன்னால் வர இயலாது என கூறியுள்ளார் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்த சின்னாவையும் மது அருந்த வருமாறு ரமேஷ் அழைத்துள்ளார். உடனே நேரில் சென்ற சின்ன ரமேஷ் மற்றும் மற்ற நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, இப்பொழுது வா பிறந்தநாள் விழாவிற்கு என அழைத்துள்ளார். ஆனால், ரமேஷ் செல்ல மறுத்துள்ளார்.
எனவே போதையில் இருந்த சின்னா தனது காரில் ஏறி ரமேஷை மோதி கீழே தள்ளி விட்டு பின், கீழே விழுந்த ரமேஷ் மீது 3 முறை முன்னும் பின்னுமாக காரை ஏற்றி டயரால் நசுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். நண்பர்கள் காப்பாற்ற இடையில் சென்றாலும் சின்னா மது போதையில் இருந்ததால் மிகவும் வெறித்தனமாக ரமேஷ் மீது காரை ஏற்றி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷை மீட்டு உடன் இருந்த நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் தற்பொழுது சின்னா மீது வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், தப்பியோடிய சின்னவை தேடியும் வருகின்றனர். பிறந்தநாள் விழாவிற்கு வரவில்லை என்பதற்காக நண்பன் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.