திருநெல்வேலியில் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…! இங்கிலாந்து போதகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!
இங்கிலாந்து கிறிஸ்தவ போதகர் ஜோனதான் ராபின்சன் (70) என்பவருக்கு, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவருக்கு ,வள்ளியூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வள்ளியூர் அருகே சின்னம்மாள்புரத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து `கிரேல் டிரஸ்ட்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோனதான் ராபின்சன் நடத்தி வந்தார்.
இந்த இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனை சென்னை, புதுடெல்லி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஜோனதான் ராபின்சன் மீது, பெங்களூரிலுள்ள ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வள்ளியூர் போலீஸில் புகார் அளித்தது.
இதன்பேரில் ஜோனதான் ராபின்சன் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இதையறிந்த ஜோனதான் ராபின்சன் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். பின்னர் அவரை சர்வதேச போலீஸாரின் துணையுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் வள்ளியூர் நீதிமன்றத்தில் கடந்த 26.11.2015-ல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர் சரணடைந்தார்.
விசாரணை முடிந்து, இவ்வழக்கில், ஜோனதான் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து, மாஜிஸ்திரேட் செந்தில்குமார் நேற்று தீர்ப்ப ளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.