800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரதமர் அவாஸ் யோஜனாவின் கீழ் 1.67 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள், 80 மில்லியன் மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டது மற்றும் 400 மில்லியன் மக்கள், விவசாயிகள், பெண்கள் ஏழைகளுக்கு நேரடியாக பணம் வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சியில் உள்ள சிலர் தொடர்ந்து குற்றம் சாட்டுவது ஒரு வகையான பழக்கமாகிவிட்டது.நாங்கள் ஏழைகளுக்காக என்ன செய்கிறோம் மற்றும் இந்த நாட்டின் ஏழைகளுக்கும் உதவுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் என்பது தெரியும்.குற்றம் சாட்ட ஒரு தவறான கதை உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அவாஸ் யோஜனாவின் கீழ் 1.67 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.பிரதமர் சவுபாக்யா யோஜனாவின் கீழ் மின்மயமாக்கப்பட்ட 2.67 கோடி குடும்பங்கள் அரசாங்க மின் சந்தையில் வைக்கப்பட்டுள்ள ஆர்டர்களின் மொத்த மதிப்பு ரூ .8,22,077 கோடி என்று பேசியுள்ளார்.