ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி திரட்டுவதாக கூறி ஏமாற்றிய இருவர் கைது!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பணம் திரட்டுவதற்காக கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் உத்திரபிரதேச மாநிலத்தின் கண்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த வருடம் பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கோவில் கட்டுவதற்கான கட்டுமான நிதி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களிடமும் இருந்து திரட்டப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும், பிரபலங்களும் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதியை கொடுத்து வருகின்றனர். இதுவரையில் 1000 கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு கிராமங்களிலும் நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில் சிலர் ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவது ஆகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
தற்போதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி திரட்டுவது ஆக கூறி மக்களை ஏமாற்றியதாக உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இரண்டு பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போலியான நன்கொடை ரசீதுகள் வழங்கி மக்களிடமிருந்து பணம் வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதுபோல புலண்ட்ஷகாரிலும் போலியான நன்கொடை ரசீது கொடுத்து மக்களிடமிருந்து பணம் வசூலித்து வந்த இருவர் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இருந்ததும் குறிப்பிடத்தக்கது.