ரிலீஸ்க்கு ரெடியான அருண் விஜய்யின் ‘சினம்’.! வெளியீட்டு தேதி எப்போது தெரியுமா.?
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சினம் படத்தினை மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று சினம் .ஜீஎன்ஆர் குமாரவேலன் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளார் .மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய்யின் தந்தையும் ,நடிகருமான விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்க கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் .
இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் . படப்பிடிப்பை முடித்துள்ள அருண் விஜய்யின் சினம் படத்திற்கு சமீபத்தில் சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது சினம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது அருண் விஜய்யின் சினம் படத்தினை மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.