வாரிசு அரசியலாக மாறிவிட கூடாது என்பதால் நான் மறுத்துவிட்டேன் – கமல்ஹாசன்

Default Image

தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு இருங்கள், மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பான தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட அனைத்து முடிவையும் எடுக்க தலைவர் கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும். ஊழல் கட்சிகளுக்கு எதிராக மாற்றத்தை கொண்டு வருவோம் என கூறியுள்ளார்.

மேலும், தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு இருங்கள், மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என தெரிவித்துள்ளார். எனது இரு மகள்களும் பொதுக்குழுவிற்கு வருவதாக கூறினார்கள், ஆனால், வாரிசு அரசியலாக மாறிவிட கூடாது என்பதால் நான் மறுத்துவிட்டேன் என மறைமுகமாக வாரிசு அரசியல் செய்பவர்களை சுட்டிக்காட்டி கமல்ஹாசன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்