தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளிய உலக அழகி..!

Default Image

விஜயுடன் நான் நடித்த தமிழன் திரைப்படத்தை எனது வாழ்நாளில் மறக்க முடியாது என்று நடிகை பிரியங்கா சோப்ரா எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் முதல் முதலாக தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு பாலிவுட்டிற்கு சென்று மிகப்பெரிய நடிகையாக தற்போது உச்சத்தில் உள்ளார். இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு உலக அழகி என்ற பட்டம் பெற்றவர்.

இந்த நிலையில் தற்போது இவர் அன்பினிஷிடு என்ற தலைப்பில் தனது வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான விஷயங்களை பற்றி ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார், அந்த புத்தகத்தில் தான் முதன் முதலாக நடத்த படத்தில் ஹீரோவாக நடித்த தளபதி விஜயை பற்றியும் சில விஷியங்களை கூறியுள்ளார்.

அதில் அவர் விஜய்யை பற்றி எழுதியிருப்பது “விஜயுடன் நான் நடித்த தமிழன் திரைப்படத்தை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. நடிகர் விஜய் அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் ரசிகர்கள் மேல் வைத்துள்ள நெருக்கமும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது. தமிழன் படம் எனது முதல் திரைப்படம் என்பதால் நான் விஜயிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் அதில் ஒரு விஷயம் என்னவென்றால் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பது. உதாரணமாக குவாண்டிகா தொடரில் நடித்து வந்தபோது ரசிகர்கள் என்னைப் பார்க்க மிகவும் ஏராளமானோர் குவிந்தனர். எப்போது எனக்கு விஜய் தான் நினைவில் வந்தார் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்