ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்காவிற்கு பறந்த தனுஷ்.!
தனுஷ் நேற்றிரவு தனது ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தில் நடித்து வந்தார் .இதன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த தனுஷ் நேற்று
தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அவர் விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘தி க்ரே மேன் படத்தினை அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கவுள்ளனர்.ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் ஆக உருவாக இருக்கும் இந்த படம் மார்க் க்ரேனேவின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நேற்றிரவு தனது ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.#Dhanush | #TheGrayMan | #DSetsOffToUSA pic.twitter.com/AkAZL2BJZS
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) February 11, 2021