துரோகம் செய்தவர்கள், ஒருபோதும் அதிமுகவில் இடமில்லை – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

தேர்தலில் அமமுகவிற்கு மக்கள் துந்த பாடம் புகட்டுவர் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் உய்யாலிகுப்பம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்கள். அமமுகவை தொடங்கி கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதால், அவர்களுக்கு ஒருபோதும் அதிமுகவில் இடமில்லை என சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
திமுக, அமமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூடி பேசும் நிலை வரும். அதனால், கூட்டணி பொறுத்தளவில் எந்த பிரச்னையும் இல்லை, கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. மேலும் சில கட்சிகள் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு வரும் நிலை உள்ளது என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025