இன்று பூஜையுடன் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் .!
சிவகார்த்திகேயனின் டான் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் டான் . இதனை அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.அதனை தொடர்ந்து டான் படத்தில் முனீஷ்காந்த்,காளி வெங்கட் மற்றும் பாலா ஆகிய மூன்று காமெடி நடிகர்களும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி ,ஆர்ஜே விஜய் ஆகியோரும் டான் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர் .
இந்த நிலையில் இன்று முதல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள டான் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது .இதில் சிவகார்த்திகேயன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர் .அந்த புகைப்படங்களை லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது .தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
#DON ???? Roll????️ Camera???? Action???? started with Poojai @Siva_Kartikeyan @anirudhofficial @priyankaamohan @dop_bhaskaran @iam_SJSuryah @thondankani @sooriofficial @RJVijayOfficial @kaaliactor @Bala_actor @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @DONMovieOffl @Inagseditor @anustylist pic.twitter.com/to7SHx0v3i
— Lyca Productions (@LycaProductions) February 11, 2021