விவசாயிகளை கொன்றது திமுக தான் – பொன்.ராதாகிருஷ்ணன்
அதிமுகவின் திட்டத்தை யாரோ வெளியிடுகிறார்கள், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனிடம், நான் சொல்வதை எல்லாம் முதல்வர் பழனிசாமி செய்து வருவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டிக்கிறார் என்ற கேள்விக்கு, அப்போ அதிமுகவும், அரசாங்கமும் கவனமாக இருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளார். அதிமுகவின் திட்டத்தை யாரோ வெளியிடுகிறார்கள், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும்போது, அதற்கு முன், பின் வரக்கூடிய ஓரிரு நாட்களுக்குள் இதெல்லாம் முடியும் என்று சாத்தியப்படும் போது சொல்கிறது வேறு, நாங்கள் வந்தால் இதையெல்லாம் செய்வோம் என்று கூறிக்கொண்டு வருவது வேறு என விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்யப்பட்டது என்றும் விவசாயிகள் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறி நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது யாரு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைக்கு எல்லாரும் வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளை கொன்றது திமுக தான் என்று குற்றசாட்டியுள்ளார். திமுகவிற்கு இருக்கும் மிக பெரிய பட்டப்பெயரே செய்யக்கூடிய ஊழல் வெளியே தெரியாத வகையில் விஞ்ஞான பூர்வமாக செய்வார்கள் என தெரிவித்துள்ளார். தமிழக அரசு கொண்டுவர கூடிய திட்டங்கள் முன்கூட்டியே தெரியுது என்றால், அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சசிகலா வருகை அந்த நாளில் எழுச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.