இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் கட்டணம் 5 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை ….!
5 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை ஐ.ஐ.எம். எனப்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அதிகரித்து வரும் உள்கட்டமைப்பு, நிர்வாகச் செலவு, ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்த ஆலோசித்துள்ளதாக ஐஐஎம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முந்தைய ஆண்டு கல்விக் கட்டணத்தை விட 80 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
திருச்சி ஐ.ஐ.எம்.மிலும் முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டு 14 லட்சமாக நிர்ணயிக்கப்படுகிறது. 2018-2020-ம் கல்வியாண்டுக்கே இதனை நடைமுறைப்படுத்த ஐஐஎம் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.