ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் -இந்திய தேர்தல் ஆணையரிடம் அதிமுக கோரிக்கை
சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜிவ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் இன்று தமிழகம் வந்தனர்.தற்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்களுடன் தேர்தல் ஆணையக் குழு தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதியை அதிமுக வரவேற்பதாகவும் ,வாக்குச்சாவடிகளில் நிழலுக்கு பந்தல், குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவு எந்திரம் இருக்கும் இடத்தில் மின்விளக்கு பொறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.