2.84 லட்சம் அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது -முதலமைச்சர் பழனிசாமி
ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் 25,000 ரூபாய் மானியம் கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதன்காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
அந்த வகையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஜெயலலிதா இருக்கும்போது உழைக்கும் மகளீருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.ஜெயலலிதா அவர்கள் மறைந்தாலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு அந்த உழைக்கும் மகளீருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் தொடர்ந்து கொடுத்து வருகிறது அரசு.ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் 25,000 ரூபாய் மானியம் கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு.தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்பட்டது.இதுவரை 2.84 லட்சம் மகளீருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று பேசியுள்ளார்.