தூத்துக்குடியில் கனமழை …!பொதுமக்கள் மகிழ்ச்சி …!
தூத்துக்குடியில் கனமழை பெய்து வரும் நிலையில், மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி,முதுகுளத்தூர், கீழத்தூவல், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கொட்டிய மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், செல்லம்பட்டி, வெட்டிக்காடு, ஈச்சங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், பட்டுக்கோட்டை சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுஇடங்களில் நடமாட முடியாமல் போனாலும், குளுமையான சூழல் நிலவியதை மக்கள் நிம்மதியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலும் இன்று மழை பெய்தது. காரியாபட்டி, கல்குறிச்சி, ஆவியூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதேபோல, கன்னியாகுமரி, அரியலூர் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகின்றது.மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.