வெறித்தனம்… கைதி 2வில் மாஸ்டர் பவானி வெளியான சூப்பர் தகவல்..!
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரைப்படம் கைதி 2 என்றும்,அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தினை இயக்க உள்ளதாக கூறப்பட்டது .ஆனால் அந்த திரைப்படம் கமலின் தேர்தல் காரணமாக தள்ளி போகவுள்ள நிலையில் அதனிடையில் லோகேஷ் கனகராஜ் வேறொரு படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது .இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் படமானது கைதி-2 என்ற தகவல் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டான நிலையில் விஜய் சேதுபதியை வைத்து அடுத்ததாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும் ,அதனை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.