யானையான ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய முடியுமா?தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!

Default Image

சென்னை உயர்நீதிமன்றம், சேலம் கோவில் யானையான ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய முடியுமா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளது.

விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் பெண்யானையான ராஜேஸ்வரி காலில் வலி ஏற்பட்டு ஒருமாதமாக படுத்த படுக்கையாக இருப்பதாகவும், இதனால் யானைக்கு புண் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவரீதியாக குணப்படுத்த முடியாது என தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.  இம்மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது யானையை கருணைக்கொலை செய்ய முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை திங்கட் கிழமை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்