வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் பணமும், மதுவும் பாய்கிறது – உயர்நீதிமன்றம்
வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் பணமும், மதுவும் பாய்ந்தோடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்கும், வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கும் வித்தியாசம் இல்லை என நீதிபதி கிருபாகரன் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மதுவுக்காக தங்களை விற்கும் வழக்கறிஞர்கள் கூட இருப்பதாக கடுமையாக கருத்துக்களை உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ளது.
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் நீதித்துறை அதிகாரிகளை மிரட்டுவதாகவும் நீதிபதி குற்றசாட்டியுள்ளனர். சேலம் வழக்கறிஞர் சங்க தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம் வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்.