வெள்ளப்பெருக்கில் 197 பேரை காணவில்லை., 20 பேர் உயிரிழப்பு – உள்துறை அமைச்சர் அமித்ஷா

Default Image

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் 197 பேரை காணவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள பனிச்சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் 18 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், தேசிய பேரிடர் மீட்பு முழு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வெள்ள நீர் அதிகரித்ததால் நதியின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் 197 பேரை காணவில்லை என்றும் 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்கள் மாறக்கூடும் என்றும் நிலைமை மோசமாக உள்ளதால் தொடர்ந்து மத்திய அரசு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே, உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் இன்று மேலும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காணாமல்போன 170 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்