மதுரை மெட்ரோ ரயில் சேவை தொடர்பான வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Default Image

மதுரை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை அமல்படுத்த கோரி தொடரப்பட்ட  வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி நடந்து வரும் நிலையில், 20 லட்சம் மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அங்கு மட்டுமல்லாமல், கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவையும் தற்பொழுது வரையும் செயல்பட்டு வரும் நிலையில், மதுரை நகரை கடந்து திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் மதுரையை சார்ந்ததாகவே மாறிப் போயிருக்கும் நிலையில் மதுரையில் உள்ள மக்கள் தற்பொழுது பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் வெறும் வாக்குறுதியாக அமைந்து தற்போது வரை இருப்பதாகவும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அது மட்டுமல்லாம், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கோரிக்கையை பலதரப்பு சார்பில் கொடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் செயல்முறை படுத்தப்படாததால் போக்குவரத்து நெருக்கடியில் சென்னைக்கு அடுத்து மதுரை இருப்பதாகவும் ரமேஷின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரேஷ் ஆனந்தி அமர்வு மத்திய, மாநில அரசுகள் மதுரை மெட்ரோ ரயில் சேவை குறித்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்