கர்ணன் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.!

கர்ணன் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் அதிக விலைக்கு கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ரெஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கர்ணன் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் அதிக விலைக்கு கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . விரைவில் கர்ணன் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Immensely happy to associate with Think Music again after the blockbuster hits, Theri & Kabali. #Karnan audio rights has been bagged by @thinkmusicindia for a record breaking price #KarnanWithThink @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj pic.twitter.com/6JVgWSnHMi
— Kalaippuli S Thanu (@theVcreations) February 8, 2021