திருமணத்தை முடித்த ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை.! மணமக்களின் அழகிய புகைப்படம்.!
நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வரும் ரஷ்மி ஜெயராஜிற்கு திருமணம் முடிந்துள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரஷ்மி ஜெய்ராஜ் .இதன் முதல் பாகத்தில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் தொடரிலும் நடித்து வந்தார்.
அதனை தொடர்ந்து கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சீரியலானது அதே பெயரில் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கியது.அதில் அண்மையிலிருந்து தாமரை என்ற கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க தொடங்கிய இவருக்கு
சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்ததும்,அவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் குடும்பத்தினர் முன்னிலையில் ரஷ்மிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது . கணவருடன் இணைந்துள்ள அவரது திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனுடன் இந்த புதுமண தம்பதிக்கு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram