பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மற்றொரு நடிகருக்கும் பட வாய்ப்பு.! அப்போ அவரும் இனி சீரியலில இல்லையா.?
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் வெங்கட்டிற்கு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .அண்ணன்-தம்பி மற்றும் கூட்டு குடும்பத்தில் உள்ள பாச பிணைப்பை கூறும் இந்த தொடரில் நடிக்கும் அனைவரும் ரசிகர்களைடையே மிகவும் பிரபலம் .இதில் கடந்த சில நாட்களாக ரசிகர்களை மிகவும் கவர்ந்த கதிர் வேடத்தில் நடிக்கும் குமரனை காட்டவில்லை.
அதற்கு சில சமூக ஊடகங்களில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஊருக்கு சென்றுள்ளார் என்றும் , சினிமாவில் நடிக்க உள்ளதாகவும்,அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் சீரியலில் அவரை காணவில்லை என்றும் தகவல்கள் பரவி வந்தது .இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் மற்றொரு நடிகரும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் அடுத்ததாக எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும், அதற்காக அவர் தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.இருப்பினும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.