87 ஆபாச படங்கள் எடுத்ததாக கூறி கைதான ‘பேய்கள் ஜாக்கிரதை’ பட நடிகை.!
87 ஆபாச படங்கள் எடுத்ததாக கூறி பிரபல நடிகை கெஹானா வசிஸ்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடியவர் கெஹானா வசிஸ்த்.இவர் வெப் தொடர்களில் மட்டுமின்றி பல இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமாக திகழ்பவர் .இந்த நிலையில் இவர் ஆபாச வீடியோக்களை பதிவு செய்வதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார் .
மும்பையின் மலாத் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் ஆபாசப் படங்கள் எடுக்கப்படுவதாக நேற்று வந்த தகவலை தொடர்ந்து அங்கு மும்பை குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையின் போது நடிகை கெஹானா வசிஸ்த் மற்றும் அவருடன் இரண்டு ஆபாச பட நடிகர்கள், பெண் கேமராமேன், எடிட்டர், ஒரு இளம்பெண் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர் .அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், லேப்டாப்களை ஆய்வு செய்த போது இதுவரை 87 ஆபாசப்படங்களை கெஹானா வசிஸ்த் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.ஆபாச படம் கைதான நடிகையால் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனை குறித்து போலீசார் கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.