உத்தரகண்ட் பனிப்பாறை நிலச்சரிவு : தேவைப்பட்டால் உதவி செய்ய தயார் – பிரதமர் போரிஸ் ஜான்சன்
பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் உதவியை வழங்கவும் தயாராக இருப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீர்மின் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 100 பேர் அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பனிப்பாறை வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும், இந்தியா குறித்துமே எனது சிந்தனை உள்ளது. பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் உதவியை வழங்கவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.