தமிழகத்திற்கு புறப்பட்ட சசிகலாவிற்கு ட்ரோன் மூலம் வரவேற்பு
தமிழகத்திற்கு புறப்பட்ட சசிகலாவிற்கு ட்ரோன் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக எல்லைப்பகுதிக்குள் வந்தடைந்த சசிகலாவிற்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா வரும் வழி முழுவதும் சிறப்பான வரவேற்பை கொடுக்க அமமுகவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மேலும், சசிகலா ஓசூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சசிகலா தனது கழுத்தில் சிகப்பு ,கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட துண்டு அணிந்து இருந்தார்.இதனிடையே சசிகலாவிற்கு ட்ரோன் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. ட்ரோனில் சசிகலாவின் படங்களோடு கொண்ட விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.