சசிகலாவை வரவேற்க வெடி வெடித்த தொண்டர்கள்..! கார்களில் பற்றி பிடித்த தீ…!
சசிகலா வருகைக்காக தொண்டர்கள் வெடி வெடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 கார்களில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததில் 2 கார்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின், கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், இவர் உடல்நலக் குறைவு காரணமாக, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின் குணமடைந்து, பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஒருசில நாட்கள் ஓய்வெடுத்தார்.
இந்நிலையில், இன்று தமிழகம் வருகை தந்துள்ள சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி டோலக்ட் அருகே, சசிகலா வருகைக்காக தொண்டர்கள் வெடி வெடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 கார்களில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததில் 2 கார்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.