வழக்கத்தை விட 2மடங்கு அதிகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்!

Default Image

இமயமலை பனிப்பாறைகள் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உருகுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் கூறப்பட்டுள்ளது.

செயற்கை கோள்கள் மூலமாக இமயமலையின் மேற்கிலிருந்து கிழக்கு வரையுமுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். தற்பொழுது கிட்டத்தட்ட 650 க்கும் மேற்பட்ட பனிப்பாறைகளின் செயற்கைகோள் படங்களை ஆய்வு செய்து உள்ளனர். இதற்கு முன்பதாக அமெரிக்காவின் உளவு செயற்கை கோள் மூலமாக 2000 ஆம் ஆண்டு கடைசியாக ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வுகளின் தரவுகளையும், தற்பொழுது செய்யப்பட்ட ஆய்வுகளின் தரவுகளையும் ஒப்பிட்டு பார்த்ததில் கடந்த 20 வருட காலகட்டத்தில் இமையமளியின் உயரம் அதிகமாக குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இமயமலை முன்பை விட 2 மடங்கு அதிகமாக உருக்குவதாக ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்