முதலையின் வாலை பிடித்து இழுத்து சென்ற இளைஞர்கள்…! வனத்துறையினர் விசாரணை…!
இளைஞர்கள் சிலர் முதலை ஒன்றை பிடித்து, இழுத்து சென்று அதோடு விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் முதலை ஒன்றை பிடித்து, இழுத்து சென்று அதோடு விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக யானை, மான், முயல், காட்டுப்பன்றி என விலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதால், முதலையும் வேட்டையாடப்படுகிறதா? என ச்சம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இளைஞர்கள் முதலையை அடித்து சமைத்து சாப்பிட்டார்களா? அல்லது இறந்து கிடந்த முதலையை நீரில் இழுத்துச் சென்று விளையாடினார்களா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.