IPL 2018:விராத் கோலியை பழிவாங்க காத்திருக்கும் சிக்ஸர் மன்னன் …!பழி தீர்ப்பாரா பஞ்சாப் கிறிஸ் கெய்ல்…!பெங்களூர் -பஞ்சாப் மோதல் …!
இந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் தொடங்கி அனைத்து அணிகளும் குறைந்த பட்சம் ஒரு போட்டியாவது விளையாடி இருக்கிறது.
விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் வெலவன் பஞ்சாப் அணிகள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.
முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற நான்கு அணிகளுள் ஒன்று தான் பஞ்சாப். ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி ஐபில் ஏலத்தில் நட்சத்திர வீரர்களை வாங்கியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அதிரடி ஆட்டக்காரர்களான யுவராஜ் சிங் மற்றும் கிறிஸ் கெய்லயும் வாங்கியது.
முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக வெற்றியை பெற்று அசத்தியது பஞ்சாப் அணி. டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன் அடிக்க யுவராஜ் சிங் திணற, அணியில் இடம் பிடிக்க தவறிவிட்டார் கிறிஸ் கெய்ல். இதனால், வாய்ப்புக்காக காத்திருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர்.
முதல் போட்டியில் கிறிஸ் கெய்ல் இல்லாததை பற்றி கேட்ட போது, “இது சரியென தோன்றியதால், அணி எடுத்த முடிவு அது. ஒரு முறை நல்ல அணி கிடைத்து விட்டால், நாங்கள் அவர்களை நம்பவேண்டும், மேலும் அந்த அணியை வைத்து தான் விளையாட வேண்டும்,” என கேப்டன் ரவி அஸ்வின் கூறினார்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக நட்சத்திர வீரர் லோகேஷ் ராகுல் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால், டெல்லி அணியை எளிதாக வீழ்த்தியது பஞ்சாப் அணி.
அந்த போட்டியின் போது வெளியே உட்காருவது பற்றி கிறிஸ் கெய்லிடம் கேட்டார் பிரெட் லீ.”நான் கடந்த சில நாட்களாக நல்ல பயிற்சி எடுத்து வருகிறேன் மற்றும் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன். நான் நடுவில் அணியில் இடம் பெற காத்திருக்கிறேன். நான் அமைதியாக காத்திருக்க வேண்டும்,” என கிறிஸ் கெய்ல் கூறினார்.
“நான் உடல்நலத்துடன் உள்ளேன் மற்றும் கிரிக்கெட் விளையாட காத்திருக்கிறேன். ரசிகர்கள் எப்போதும் பொழுதுபோக்காக இன்னிங்க்ஸை எதிர்பார்ப்பார்கள். இதனால், என்னால் முடிந்த வரை நான் கிரிக்கெட் விளையாடுவேன்,” என அவர் மேலும் கூறினார்.
“நான் எப்போது பேட்டிங் விளையாட சென்றாலும் என்னிடம் இருந்து சதமோ அல்லது அதிகமான சிக்ஸர்களோ ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் மீண்டும் அதை செய்வேன்,” என கெய்ல் தெரிவித்தார்.
பஞ்சாப் அணி அடுத்ததாக கிறிஸ் கெய்லின் முன்னாள் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சின்னஸ்வாமி மைதானத்தில் இன்று விளையாடவுள்ளது.
அதே போல் பெங்களூர் அணி முதல் ஆட்டத்தில் கொல்கத்தா விடம் தோற்றது. அந்த அணியில் கோலி, மெக்குல்லம், டிவில்லியர்ஸ், டி காக் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தாலும் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது.
பந்துவீச்சிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த குறைகளை சரி செய்வது அவசியமாகும். பெங்களூர் முதல் வெற்றியை நோக்கி காத்திருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.