தளபதிக்கு ஜோடியாக கியரா அத்வானி…? வெளியான சூப்பர் தகவல்..!

விஜயின் 65 வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கியரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடித்து விட்டு அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பாகவே வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது கிடைத்த மற்றோரு தகவல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கியரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025