#BREAKING: உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கி 150 பேர் உயிரிழப்பு?

Default Image

உத்தரகாண்ட் சமோலியில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட பனிச்சரிவால் தெளளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்காக மாறியுள்ளது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உத்தரகாண்ட் சமோலியில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 முதல் 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பாதுகாப்பு மீட்பு படை குழு விரைந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. உத்தரகாண்டில் நந்ததேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் நீர் மின் திட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு வெள்ளம் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசியுள்ளார். பேரிடர் குறித்த நிலையை கண்காணித்து வருகிறோம் என்று கூறியுள்ளார். இதனிடையே, வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்பதற்கு பேரிடம் குழு கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly